பாலிவுட் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய படங்களிலும் நடித்து வரும் சன்னிலியோன், தமிழில் வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்தபடம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இந்த நிலையில், சினிமாக்களில் நடித்தபடியே தனது வாழ்க்கை வரலாறு கதையில் உருவான கரன்ஜித் கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி என்ற வெப்சீரிஸில் நடித்தார் சன்னிலியோன். அதையடுத்து தற்போது அவர் ஒரு காமெடி வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். காமெடி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், மற்றவர்களின் முகத்தில் புன்னகையை வரவைக்கும் நல்ல செயல் காமெடி என்பதால் உற்சாகமாக நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ள அவர், இந்த தொடரில் நடிக்க தனக்கு தரப்பட்ட அனைத்து சம்பளத்தையும் மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

