கதைகளின் நாயகி, இயக்குநர்களின் நாயகி என அறிமுகமான குறுகிய காலத்திலேயே பெயர் வாங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் காக்கா முட்டை என்ற படத்தில், வட சென்னைப் பெண்ணாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக பத்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
தொடர்ந்து கனா உள்ளிட்ட படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில் தெலுங்கில் தன் கவனத்தை திருப்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அங்கு மெல்ல கவர்ச்சிக்கு மாறுகிறாரோ என எண்ண வைக்கிறது சமீபத்திய அவரின் கவர்ச்சி போட்டோ ஷூட்.
இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

