முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாய் நடந்தது. விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, இது இசை வெளியீட்டு விழா அல்ல, சிறிய மாநாடு போன்று இருக்கிறது. சினிமாவில் சாதித்த பின்னரும் தன்னை கை தூக்கிவிட்டவர்களை மறக்காதவர்.
விஜய், நீ இந்த சமுதாயத்திற்கு தேவை. சமுதாயத்திற்கு தேவை என்பதற்கே இவ்வளவு கைதட்டல், நீ இறங்கினால் எவ்வளவு கைதட்டல்? இருக்கும். இப்போது உள்ள தமிழக சர்கார் சுமாராக இருப்பதால் இந்த சர்கார் வருகிறது என்றார்