யுடர்ன் படத்தை அடுத்து தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் சமந்தா.தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து மஜிலி மற்றும் மிஸ் கிரானி எனும் கொரியன் ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார் சமந்தா. அந்த வகையில், இந்த ஆண்டும் கொண்டாட்டத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார். தனது தோழி சாத்னா சிங்குடன் இணைந்து ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி அதை அலங்காரம் செய்திருப்பவர், அந்த மரத்தை சோசியல் மீடியாவிலும் வெளியிட்டிருக்கிறார்.

