இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் சந்தோஷ் சிவனும் ஒருவர். சமீபத்தில் வெளியான தர்பார் படத்திற்கும் இவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இவரது மகன் சர்வஜித் தந்தையின் ரூட்டில் இருந்து விலகி, நடிப்பு பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
இன்னும் டீன் ஏஜ் வயதை தாண்டாத இவர், தற்போது துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘வரனே ஆவஷ்யமுண்டு’ என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரும் துல்கரும் இணைந்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

