இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங். இவரது வாழ்க்கை, ஹிந்தியில் “சூர்மா” என்ற பெயரில் படமாக உருவாகிறது. நடிகர் தில்ஜித், சந்தீப் ரோலில் நடிக்கிறார். முன்னதாக இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப்படத்திற்காக ஷாத் அலி மற்றும் சோனி பிக்சர்ஸ் என்னிடம் நடிக்க கேட்டு வந்தனர். ஆனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். இரண்டு, மூன்று முறை நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். பின்னர் அவர்கள் என்னை நடிக்க சம்மதிக்க வைத்தனர், அதன்பின்னரே நடித்தேன் என்றார்.
சூர்மா படத்தை ஷாத் அலி இயக்க, சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தில்ஜித் ஜோடியாக டாப்சி நடிக்கிறார். அடுத்தாண்டு ஜூன் 29-ல் படம் ரிலீஸாக உள்ளது.