லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி படம் அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. அதையடுத்து தற்போது சண்டக்கோழி-2 படத்திலும் லிங்குசாமி இயக்கத்தில் நடித்துள்ளார் விஷால். இந்த படத்திலும் ராஜ்கிரண் நடித்துள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அக்டோபர் 18-ந்தேதி இப்படம் வெளியாகிறது.
மேலும், தற்போது சண்டக்கோழி-2 படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் தீவிரமடைந்துள்ள விஷால், எதிர்காலத்தில் சண்டக்கோழி-3 படமும் உருவாகும், அந்த படத்தையும் லிங்குசாமியே இயக்குவார் என்று ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.