சண்டக்கோழி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் லால். இவர் நடிகர் மட்டுமல்ல, கதாசிரியரும் இயக்குனரும் கூட. இயக்குனர் சித்திகுடன் இணைந்து சில படங்களை இயக்கியுள்ள இவர், அவரிடமிருந்து பிரிந்தபின் தனியாகவும் சில படங்களை இயக்கி வந்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திலீப்-மடோனாவை வைத்து ‘கிங் லயர்’ என்கிற படத்தை இயக்கிய லால், தற்போது மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ளார். ட்ரைவிங் லைசென்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
தற்போது மோகன்லாலை வைத்து ‘லூசிபர்’ என்கிற படத்தை இயக்கிவரும் பிருத்விராஜ், அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

