மலையாளத்தில் எவர்கிரீன் சாக்லேட் ஹீரோ என சொல்லப்படும் குஞ்சாக்கோ போபன், தற்போதும் கைவசம் நான்கைந்து படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் படம் தான் ‘மரியம் டெய்லர்ஸ்’. மலையாளத்தில் ஹிட் அடித்த குப்பி மற்றும் அம்புலி படங்களை இயக்கிய ஜான் பால் ஜார்ஜ் இயக்குகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமான முறையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதாவது படத்தின் கதை ஒரு டெய்லரை மையப்படுத்தியது என்பதாலும் படத்திற்கு டைட்டிலும் மரியம் டெய்லர்ஸ் என வைக்கப்பட்டிருந்ததாலும், சட்டை காலரில் உட்புறத்தில் ஒரு லேபிள் போல பிரின்ட் செய்து அதையே பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளனர். படமும் இதே போல வித்தியாசமாக இருந்தால் சரிதான்

