Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

கோலி-அனுஷ்கா நாடு திரும்பினர்!

December 21, 2017
in Sports
0

புதுமண தம்பதியான விராட் கோலி, அனுஷ்கா சர்மா இத்தாலியில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.

4 ஆண்டு கால காதலுக்கு பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணத்துக்கு பிறகு இருவரும் இத்தாலியில் உள்ள பணிபடர்ந்த பகுதியில் சில தினங்கள் தேனிலவு கொண்டாடினர். இந்த படத்தை அனுஷ்கா சர்மா வெளியிட்டு இருந்தார். தாங்கள் இருவரும் சொர்க்கத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் புதுமண தம்பதியான விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பினர். இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் படம் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கோலி குர்தா உடையிலும், அனுஷ்கா இளம் சிவப்பு சேலையிலும் உள்ளனர்.

விராட்கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை (21-ந்தேதி) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் இருவரது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதை தொடர்ந்து 2-வது திருமண வரவேற்பு மும்பையில் 26-ந்தேதி நடக்கிறது. இதில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்காக விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. இதேபோல இன்று தொடரும் 20 ஓவர் தொடரிலும் ஓய்வு கேட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க பயணத்துக்கான இந்திய அணியோடு விராட் கோலி இணைந்து கொள்கிறார். அவருடன் மனைவி அனுஷ்காவும் உடன் செல்கிறார். புதிய தம்பதிகள் தென்னாப்பிரிக்காவில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

ஜனவரி முதல் வாரத்தில் அனுஷ்கா தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்புவார். ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அவர் நடித்த ‘பரி’ என்ற இந்தி படம் பிப்ரவரி 9-ந்தேதி வெளியாகிகிறது.

Previous Post

கிழக்கில் பல ஊடகவியாலாளர்களும் வேட்பாளர் களத்தில்

Next Post

ஒரு காலத்துல… இவன் ரொனால்டோ, மெஸ்சிக்கும் மேல… ககா…!

Next Post

ஒரு காலத்துல... இவன் ரொனால்டோ, மெஸ்சிக்கும் மேல... ககா...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures