சமீபத்தில் வெளியான நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலாவுக்கு பிரபலங்களின் பாராட்டு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்தநிலையில் நடிகை மஞ்சிமா மோகன் இந்தப்படத்தை பாராட்டியுள்ளதுடன், இயக்குனர் நெல்சனை ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், “கோலமாவு கோகிலா படம் பார்த்தேன். விவரிக்க வார்த்தைகளே இல்லை நெல்சன், நீங்கள் ஒரு சூப்பரான படத்தை கொடுத்துள்ளீர்கள்” என ஏழு வரிகள் நெல்சனை மட்டுமே புகழ்ந்துவிட்டு கடைசியாக போகிற போக்கில் அனிருத், நயன்தாராவை பாராட்டியுள்ளார்.. ஒருவேளை நெல்சனின் அடுத்த படத்தில் மஞ்சிமா கமிட் ஆகியுள்ளாரோ..?
