காளி படத்தை தொடர்ந்து திமிரு பிடிச்சன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அடுத்தப்படியாக கொலைகாரன் படத்தை துவங்கி உள்ளார்.
“சைத்தான், எமன், பிச்சைக்காரன்” படங்களின் வரிசையில் இந்தப்படத்திற்கும் நெகட்டிவான தலைப்பை வைத்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி ஜோடியாக புதுமுகம் ஆஷிமா நடிக்கிறார். வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார். ஆண்ட்ரூ லூயிஸ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது.