பாராளுமன்ற சபைக்குள் வைத்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மீது இரு எம்.பி.க்கள் கொச்சிக்காய்த் தூள் தண்ணீர் பிரயோகம் செய்தமை, புத்தகத்தினால் எறிந்து காயப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடைப் பொலிஸார் கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது

