ரங்கஸ்தலம் படத்தை அடுத்து சமந்தாவின் நடிப்பில் இரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்கள் திரைக்கு வரத்தயாராகி விட்டன. தற்போது அவர் யுடர்ன் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிப்பதற்கு எனது குடும்பத்தார் முழு ஒத்துழைப்பும், உற்சாகமும் கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் என்னால் எப்போதும் போல் சினிமாவில் முழுக்கவனம் செலுத்த முடிகிறது.
சிலர் குழந்தை பெற்றுக்கொண்டால் முழுநேர குடும்பத்தலைவி ஆகி விடுவீர்களா? என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், என்னைக் கேட்டால் குழந்தை பெற்றுக்கொண்டாலும் சினிமாவில் நடிப்பை தொடருவேன்.
ஒருவேளை கதாநாயகி வேடம் கிடைக்காத பட்சத்தில் எனக்கேற்ற மெச்சூரிட்டியான வேடங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டேயிருப்பேன் என்று கூறியுள்ளார் சமந்தா.