கடந்த ஆண்டு மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ராம்லீலா’ படத்தில் திலீப்பின் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டை பெற்றார் நடிகை ராதிகா சரத்குமார். அதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ‘தி காம்பினோஸ்’ என்கிற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ராதிகா.
கேரளாவில் மலபார் பகுதியை சேர்ந்த ஒரு குற்றப்பரம்பரையினரின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் இந்தப்படத்தில் அந்த குடும்பத்தின் மூத்தவராக, அம்மா கேரக்டரில் நடிக்கிறாராம் ராதிகா.
இவர்த விர வில்லன் நடிகர் சம்பத்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிட்னியை சேர்ந்த விளம்பரப்பட இயக்குனரான கிரிஷ் பணிக்கர் என்பவர் இந்தப்படத்தை இயக்க, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இந்தப்படத்தை தயாரிக்கிறது.

