சினிமாவை தாண்டி குறும்படம், சுயாதீனப்படம், வெப் சீரீஸ் பக்கமும் ரசிகர்கள் திரும்பி வருகிறார்கள். முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் இதன் பக்கம் திரும்பி வருகிறார்கள். இதன் சமீபத்திய வரவு, கஜோலும் ஸ்ருதி ஹாசனும்.
இருவரும் இணைந்து இந்தியில் தயாராகும் தேவி என்ற குறும்படத்தில் நடிக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்குகிறார். இதுகுறித்து இயக்குநர் பிரியங்கா பானர்ஜி கூறியதாவது: சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் உள்ள பெண்களின் கதை இது. ஓர் அறையில் இவர்கள் அனைவரும் வசிக்கும் சூழ்நிலை உருவாகிறது. அப்போது, அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் கதைதான் இந்த குறும்படம். கஜோல், ஸ்ருதியுடன் இணைந்து நீனா குல்கர்னி, ஷிவானி ரகுவன்ஷி ஆகியோரும் நடித்துள்ளனர். என்றார்.

