சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்களின் வரிசையில் ஹிந்தியில் வெளியான படம் கும்நாம். சூப்பர் ஹிட்டான இந்தப்படத்தின் பெயரிலேயே தற்போது புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. ஆனால் டைட்டில் தவிர இந்தப்படத்திற்கும் புதிய படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப்படத்தின் ஹிந்தி வெர்சனில் நடிக்க அமிதாப் பச்சனிடம் பேசி முடித்துவிட்டார்கள்.
அதேசமயம் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் மற்ற பதிப்புகளில் அதே கேரக்டரில் மோகன்லாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப்படம் தமிழில் வெற்றிபெற்ற ஒரு படத்தின் ரீமேக்தான் என கூறியுள்ள பட தயாரிப்பாளர், அதிகாரப்பூர்வாமான அறிவிப்பு வெளியாகும் வரை அது எந்தப்படம் என்பது சஸ்பென்ஸ் எனவும் கூறியுள்ளார்.