பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மிமேனன் நடித்த படம் – ‘கும்கி’. 2012ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான கும்கி படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழித்து தற்போது உருவாகி வருகிறது. ஆனால், ‘கும்கி’ படத்துக்கும் கும்கி -2 படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் உருவாகும் நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் ‘கும்கி 2’ படத்தின் கதை யானை மட்டுமே இரண்டு படங்களுக்குமான ஒரே தொடர்பு.
கும்கி – 2 படத்தில் நடிக்கவேண்டிய குட்டி யானையை தாய்லாந்தில் கண்டுபிடித்து முதல் இரண்டு கட்டப் படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ‘கும்கி 2’ டீம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
கும்கி படத்தில் நடித்த யாருமே இந்தப்படத்தில் நடிக்கவில்லை. முற்றிலும் வேறொரு நட்சத்திரங்களை வைத்து இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார்.
சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.