குடி போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ். “தாஜ்மஹால், கடல் பூக்கள், அன்னக்கொடி” உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார். இவர், தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ., காரில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக தெரிகிறது. ஸ்டெர்லிங் ரோட்டில் வந்தபோது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், மனோஜிடம் விசாரணை நடத்தினர். அவர் மது போதையில் காரை ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரின் காரை பறிமுதல் செய்த போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
