மகாநடி படத்தில் சாவித்ரி ரோலில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், அதையடுத்து தெலுங்கில் கமிட்டான படம் ‛மிஸ் இந்தியா’. இந்த படத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான வேடத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
நரேந்திர நாத் இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், மார்ச் 6-ந் திகதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இறுதிக்கட்ட பணிகள் தாமதமாகி வருவதால் ஏப்ரல் 17 க்கு ரிலீஸ்திகதியை மாற்றி வைத்துள்ளனர்.

