தெலுங்கு சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர் பிரேமானந்தம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். தமிழில் கில்லி, வானம், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது 62 வயதாகும் பிரேமானந்தத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பையிலுள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் இதய ஆபரேஷன். தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

