வருடத்திற்கு ஆறு படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் நடிகராகத்தான இருந்து வருகிறார் விஜயசேதுபதி. படத்திற்கு படம் சம்பளத்தை உயர்த்துவது. இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அவர் யாரிடமும் வில்லங்கம் செய்வதில்லை. கதை பிடித்திருந்தால் சம்பள விசயத்தில் விட்டுக்கொடுத்து நடிப்பதில் முதல் நடிகராக இருந்து வருகிறார் விஜயசேதுபதி.
முக்கியமாக, தயாரிப்பாளர்கள் தன்னை அழைத்துச்செல்ல சாதாரண கார்களை அனுப்பினாலும் அதில் ஸ்பாட்டுக்கு சென்று நடித்துவந்த விஜயசேதுபதி, தானும் பழைய ரக கார்களைத்தான் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இப்போதுதான், பிஎம்டபிள்யூ-7 ரக வெள்ளை நிற கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் விஜயசேதுபதி. அந்த காரை வாங்கியதும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காரில் ஏற்றி கோவிலுக்கு சென்றுஅர்ச்சனை செய்த பிறகுதான் மற்றவர்களை அந்த காரில் உட்கார அனுமதித்தாராம் விஜயசேதுபதி.