தமிழில், அருண் விஜய் நடித்து வெற்றி பெற்ற, தடம் படத்தின் தெலுங்கு, ‘ரீமேக்’கில், நிவேதாபெத்துராஜ் நடிக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”சிறு வயதில் இருந்தே, காவல் துறை மீது எனக்கு, காதலே உண்டு. ஐ.பி.எஸ்., அதிகாரி ஆக ஆசைப்பட்டேன்.
ஏற்கனவே இரு படங்களில், காவல் அதிகாரியாக நடித்துள்ளேன். இப்போது, இந்த புதிய படத்திலும், காவல் அதிகாரி கதாபாத்திரம் என்றாலும், இது வித்தியாசமானதாக இருக்கும்,” என்றார்.

