இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம், வரும் ஏப்., 27ல் ரிலீஸ் ஆகும் என, கூறப்பட்டது. ஆனால், தற்போது, ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தெரிகிறது.
தற்போது, தமிழகத்தில் நடந்து வரும் தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக்கால், மார்ச் 1லிருந்து எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர்களும் ஸ்ட்ரைக் செய்து வருகின்றன. இதனால், ஸ்ட்ரைக் முடிந்தாலும், ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டப் படங்கள் தேதி அடிப்படையில் வெளியாகும் என்பதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டத் தேதியில் எந்தப் படமும் ரிலீசாக வாய்ப்பில்லை. இதனால், ‘காலா’ படம், ஏப்ரல் மாதம் ரிலீசாக வாய்பில்லை.