காலா படத்தில் ரஜினியின் மருமகள்களாக நடித்தவர்களில் சிங்கப்பூர் சுகன்யாவும் ஒருவர். சின்னத்திரையில் நடித்து வந்த இவர், காலா பட வாய்ப்பால் சினிமாவில் பிரபலமாகி உள்ளார்.
தற்போது, இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. தன்னுடன் படித்த விக்ரம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளார். சென்னையை சேர்ந்த விக்ரம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களது திருமணம், ஜூலை 14-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வரவேற்பு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுகிறது. சுகன்யாவின் பூர்வீகம் திண்டுக்கல் என்பதால் அங்கு வரவேற்பை நடத்துகின்றனர்.
