தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி, ஹிந்தி நடிகர் நானா பட்டேகர், ஹூமா குரேஷி, சமுத்திர கனி, ஈஸ்வரி ராவ், வத்திக்குச்சி திலீபன், அருள்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, 7-ம் தேதி வெளியான படம் காலா.
இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்திற்கான வசூலும் கபாலி அளவுக்கு கூட இல்லை. இதனால் பல ஏரியாக்களில் படத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே படத்தின் பட்ஜெட் என்ன என்ற விபரம் வெளியாகி உள்ளது.
காலா படத்தின் பட்ஜெட் தோராயமாக ரூ.170 கோடி என்கிறார்கள். இதில் ரஜினி சம்பளம் மட்டும் ரூ.60 கோடியாம். இயக்குநர் ரஞ்சித்திற்கு ரூ.10 கோடி, நானா பட்டேகருக்கு ரூ.8 கோடி, ஹூமா குரேஷிக்கு ரூ.2 கோடி, சமுத்திரகனிக்கு ரூ.1 கோடி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு ரூ.3 கோடி, மற்ற எல்லா நடிகர்களுக்கு சேர்த்து ரூ.5 கோடி, கேமரா மேன் மற்றும் மும்பை தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ரூ.4.5 கோடி மற்றும் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்ராயனுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதுதவிர படத்தின் மும்பை தாராவி செட்டிற்கு மட்டும் ரூ.35 கோடி செலவாகி உள்ளதாம். இன்னும் மற்ற துணை, இணை மற்றும் டெக்னீஷியன்கள் சம்பளம் உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.170 கோடி செலவாகி உள்ளது என கூறப்படுகிறது.