பா.ரஞ்சித் டைரக்சனில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. கபாலிக்கு எந்த அளவிற்கும் குறையாத வகையில் ‘காலாவிலும் சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளன என கூறியுள்ளார் ஆக்சன் இயக்குனர் திலீப் சுப்பராயன். படத்தில் கிட்டத்தட்ட 6 சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இவை அனைத்திலுமே ரஜினி டூப் போடாமல் நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் திலீப் சுப்பராயன்.
அதுமட்டுமல்ல தீ எபெக்ட்டில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் 6௦ டிகிரி வெப்பத்திலும் கூட நடிக்க ரஜினி தயக்கம் காட்டவில்லை என ஆச்சர்யப்படும் திலீப் சுப்பராயன், இத்தனை வயதிலும் கூட சண்டைக்காட்சிகளில் அவரது வேகம் பிரமிக்க வைக்கிறது என சிலாகித்துள்ளார்.