வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான தும்ஹாரி சுலு படம், தமிழில், ”காற்றின் மொழி“ என்ற பெயரில் ரீ-மேக்காகிறது. ஜோதிகா முதன்மை ரோலில் நடிக்க, ராதா மோன் இயக்க, பாப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று ஆரம்பமானது. நடிகர் சிவகுமார், சூர்யா கலந்து கொண்டனர். கேமராவை சூர்யா ஆன் செய்ய, சிவகுமார் கிளாப் போர்ட் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அக்டோபரில் படம் ரிலீஸாகிறது.