ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ‘விவேகானந்தா பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரிக்க, ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’.
கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இடம் பெற்றிருந்த கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது. தொடர்ந்து கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கைதி’ படத்தின் செகண்ட் லுக்கையும் அண்மையில் வெளியிட்டனர்.
இந்த செகண்ட் லுக்கிலும் கார்த்தி மிரட்டலான தோற்றம் இடம்பெற்றது. கார்த்தியின் ரசிகர்களுக்கு மற்றுமொரு ட்ரீட் ரெடி. யெஸ்.. ‘கைதி’ படத்தின் டீஸரை வருகிற 30-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் என்பதால் கைதி படத்துக்கு கூடுதல் கவனஈர்ப்பு கிடைத்துள்ளது. இதனால் கைதி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
‘கைதி’ படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒரு படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இன்னொரு படத்தை கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கி வருகிறார்.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கைதி படத்தை தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் கூட இதே வருடத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன!