கடந்த 10-ந்தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் வெளியானது. இந்த படத்தில் கல்லூரி வார்டனாக நடித்துள்ள ரஜினி, கிராமத்து தாதாவாக முறுக்கு மீசை கெட்டப்பில் இளவட்டமாக தோன்றுகிறார். அதனால் முந்தைய சில படங்களில் ரஜினியை வயதான கெட்டப்பில் பார்த்த அவரது ரசிகர்கள் இந்த படத்தில் அவரை இளமையாகப் பார்த்து தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு சென்ற டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ், கேக் வெட்டி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியிருக்கிறார். அப்போது ஒரு 50 வயது ரசிகர் ஒருவர், எங்கள் தலைவரை திருப்பிக்கொடுத்து விட்டீர்கள் என்று கார்த்திக் சுப்பராஜின் காலை தொட்டு வணங்கியிருக்கிறார்.
அதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட அவர், அவரை இழுத்து கட்டித்தழுவி அவருக்கு கேக் ஊட்டி
பேட்ட வெற்றியை பகிர்ந்து கொண்டுள்ளார்.