காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்கும் சாய்னா நெஹ்வாலுடன், அவரது தந்தை ஹர்விர் சிங்கும் உடன் சென்றுள்ளார். ஆனால் இந்திய அணியின் அங்கீகார அட்டை வழங்கப்படாததால், வீரர், வீராங்கனைகள் தங்கும் விளையாட்டு கிராமத்திற்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு உடனடியாக கடிதம் எழுதிய சாய்னா நெஹ்வால், ‘’எனது தந்தைக்கு அங்கீகார அட்டை வழங்காவிட்டால், போட்டிகளில் விளையாட மாட்டேன்’’ என குறிப்பிட்டார்.
எனவே இந்திய ஒலிம்பிக் சங்கம் உடனடியாக இந்த பிரச்னையை தீர்த்து வைத்தது.
இதன்பின் விளையாட்டு கிராமத்திற்குள் ஹர்விர் சிங் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தில் சாய்னா நெஹ்வாலை, சக இந்திய பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா, கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘’விளையாட மாட்டேன் என அச்சுறுத்தியது சரியா?’’ என ஜூவாலா கட்டா டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

