பிரபல சர்ச்சை நாயகி நடிகை பூனம் பாண்டே. ஆபாசமான பதிவுகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். சாம் பாம்பே என்பவரை இவர் காதலித்தார். இவர்களுக்கு கடந்த ஜுலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று(செப்., 11) திருமணம் நடைபெற்றது. திருமணமான போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, ”ஏழேழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

