Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

காட்டமாய் பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

November 12, 2018
in Cinema
0
காட்டமாய் பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

நவம்பர் 16-ம் தேதியன்று ‘காற்றின் மொழி’, ‘செய்’, ‘சித்திரம் பேசுதடி 2’ மற்றும் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதியளித்துள்ள நிலையில் திடீரென்று ‘திமிரு புடிச்சவன்’ படமும் நவம்பர் 16-ம் தேதி வெளியீடு என்று அதன் தயாரிப்பாளர் விளம்பரம் கொடுத்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் ‘திமிரு புடிச்சவன்’ படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு படம் வெற்றிபெற கதை மட்டுமே முக்கியம். சென்ற மாதம் இதை நாம் கண்கூடாக கண்டோம். ரிலீஸ் தேதி, எதிர்ப்பு, விளம்பரம், திரையின் தரம், எண்ணிக்கை போன்றவை மிகச்சிறிய காரணிகள். ஆனால், திரைத்துறையில் இத்தகைய காரணங்களைச் சொல்லி பதற்றப்படுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

அவருடைய கருத்தைக் கண்டு கடுப்பான காற்றின் மொழி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் காட்டமாய் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“’சர்கார்’ நன்றாக ஓடுவதால், எங்களுக்கு குறைந்த அளவு திரையரங்குகளே கிடைக்கும். எல்லாத் திரைப்படங்களுக்கும் இந்த முறை திரையரங்குகள் கிடைப்பது கடினமே. அதுவும் இன்னும் 13 நாட்களில் பெரிய படமான ‘2.0’ வெளிவரவிருக்கிறது. எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பாதித்துவிட வேண்டும் அல்லது முடிந்து போகவேண்டும் என்பது போன்ற நிலை. அதனால் தான் கவலைப்படுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் 16-ல் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

விஸ்வாசம் 3-வது லுக்கில் நயன்தாரா

Next Post

ஏ.ஆர்.முருகதாஸை பகிரங்கமாகத் தாக்கிய சின்னத்திரை இயக்குநர்

Next Post

ஏ.ஆர்.முருகதாஸை பகிரங்கமாகத் தாக்கிய சின்னத்திரை இயக்குநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures