‘சென்னை, சுயாதீன திரைப்பட விழா, சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் நிர்வாகி, பொறியாளர் சுந்தர்ராஜன் பேசியதாவது
:காடுகள், விலங்குகள் குறித்த விழிப்புணர்வு, திரையுலகினரிடையே இல்லை. அவை குறித்து வரும் சில படங்களும், தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றன.
நீயா படத்தில், பாம்புகளை அச்சமூட்டுபவையாக காண்பித்தனர். படையப்பா படத்தில், சிவப்பு நிறப் புடவையை பார்த்தவுடன், காளை மிரண்டு முட்டவரும். மாடுகளுக்கு வண்ணங்களே தெரியாது.
கும்கி படத்தில், யானைகளை வில்லனாக காண்பித்தனர்.
இப்படி நிறைய சொல்லலாம். இனியேனும், திரையுலகினர், சுற்றுச்சூழல், விலங்கினங்கள் குறித்து அறிந்து படம் எடுக்க வேண்டும்.

