அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க, வொர்செஸ்டர் அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் கவுன்டி போட்டியில், இந்திய வீரர் அஷ்வின் வொர்செஸ்டர் (363/10, 295/8 ‘டிக்ளேர்’) அணிக்காக பங்கேற்கிறார். இரண்டாவது இன்னிங்சில், அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தி அசத்த, கிளவ்செஸ்டர் அணி ( முதல் இன்னிங்ஸ் 258/10), 211 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 189 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இரு இன்னிங்சிலும் சேர்த்து அஷ்வின் (3+5) 8 விக்கெட் வீழ்த்தினார்.