அனுஷ்கா கடைசியாக நடித்த படம் பாகமதி. கடந்த பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியான பிறகு அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையடுத்து கவுதம் மேனன் இயக்கும் மல்டி ஹீரோ கதையில் நடிக்க ஒப்பந்தமானார் அனுஷ்கா.
கடந்த ஐந்து மாதங்களில் தன்னைத்தேடி வந்த எந்த படத்திலும் கமிட்டாகாமல் கவுதம்மேனனின் அழைப்புக்காக காத்திருந்தார் அனுஷ்கா. ஆனால் அவரோ, துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களில் ஈடுபட்டிருப்பதால் அவர் அடுத்த படத்தை எப்போது தொடங்குவார் என்பதே தெரியாத நிலையில் உள்ளது.
அதனால், கவுதம் மேனனுக்காக காத்திருந்து காலத்தை வீணடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ள அனுஷ்கா, இன்னும் ஓரிரு மாதங்களில் தனது புதிய படம் குறித்த செய்தியை வெளியிட்டு விட வேண்டும் என்று தன்னிடம் கால்சீட் கேட்டு வந்த சில நிறுவனங்களை அழைத்து கதை கேட்டு வருகிறார்.

