கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பளம் என ஒரு பெரும் தொகை வைரலாகி வருகிறது. அதாவது நிகழ்ச்சி தொடங்கிய போதே போட்டியாளர்களின் சம்பளம் என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் என்ற பட்டியல் வெளியானது.
அதன்படி கவினுக்கு நாள் ஒன்றுக்கு 35000 ரூபாய் என கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வியாழக்கிழமை அதாவது 95வது நாள் வெளியேறுவதாக காண்பிக்கப்பட்டது.அப்படி பார்த்தால் 95 நாட்களுக்கு 3325000 ரூபாய் கவின் சம்பாதித்துள்ளார்.
அதோடு கடைசியாக பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தையும் சேர்த்தால், 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், சும்மா உட்காந்து காதல் கடலை என பெண்களின் உணர்வுகளோடு விளையாடி, கொண்டாடிய கவினுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா என பெருமூச்சு விட்டுள்ளனர்.

