லண்டனை சேர்ந்த ஈகிள்ஸ் ஐ என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவை சேர்ந்த கவர்ச்சியான ஆண்கள் மட்டும் பெண்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை ஆலியா பட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தவிர பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், ஹினாகான், சுர்பாப் சந்தானா, ஷிவாங்கி ஜோஷி, நியா ஷர்மா ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
தென்னிந்திய நடிகைகளில் அனுஷ்கா மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவருக்கு 22வது இடம் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன்தாரா இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

