கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்த ‘கழுகு 2’ படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. கடந்த 2012ல் வெளியான ‘கழுகு’ முதல் பாகம் படத்தை இயக்கிய சத்யசிவாதான் ‘கழுகு 2’ன் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடொக்ஷன் வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், படம் சென்சாருக்குச் சென்று, ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.
இதற்கிடையில், படத்துக்கான முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. ‘சகலாகலா வில்லி’ என துவங்கும் பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி, வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக முதல்பாடலை லிரீக் வீடியோவாக வெளியிடுவார்கள். ஆனால் இந்தப்பாடலை வீடியோவாகவே வெளியிட்டுள்ளனர். மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை, குரு அய்யா துரை, சுவி சுரேஷ் பாடியிருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீசாக உள்ளது.