விக்ரமுடன் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு தமிழில் தமன்னாவுக்கு படங்கள் இல்லை. ஆனால் தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். இந்தியில் வெளியான குயின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் தமன்னா, தற்போது தெலுங்கு நடிகர் கல்யாண்ராமுடன் பெயரிடப்படாத படத்தில் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கல்யாண்ராம்-தமன்னா நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இதனால் மிக உற்சாகமாக இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா. காரணம், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் நடிக்க வேண்டும் என்பது தமன்னாவின் நீண்டநாள் கனவாம்.