கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் திரையுலகில் அவரின் 60 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக நவம்பர் 17ல் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சிக்காக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. கமலுக்காக தான் இசையமைத்த பாடல்களை மேடையில் தனது குழுவினருடன் இசை விருந்து படைக்க இருக்கிறார் இளையராஜா.
இந்த நிகழ்ச்சியில் கமலை வாழ்த்த ரஜினி உள்பட இந்திய திரையுலகின் பெரும்பாலான சினிமா கலைஞர்கள் பங்கேற்க உள்ளார்கள். இந்த நிலையில், தான் நடித்த படங்களின் பிரமோசன்களில் கூட கலந்து கொள்ளாத அஜித்திற்கும் கமல் சார்பில் விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். சீனியர் நடிகர் கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா என்பதால் இந்த விழாவில் அஜித் கலந்து கொள்வார் என்று கமல் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

