படையப்பா படத்தை அத்தை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு ஹிட் அடித்தது அந்த படம். இப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார்.
இவர் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை தற்போது மக்களிடம் பகிர்ந்துள்ளார், அதாவது அந்த படம் 19 ரீல் இருந்ததாம்.
இதனால், இரண்டு இடைவேளை விடலாம், சமீபத்தில் ஒரு ஹிந்தி படத்தில் கூட அப்படி செய்தார்கள் என்று ரஜினி கூறி முடிவெடுத்துவிட்டாராம்.
ஆனால், கமலிடம் இதுப்பற்றி கேட்க, ‘ரஜினி இரண்டு இடைவேளை எல்லாம் வேலைக்கே ஆகாது, முதலில் பொறுப்பை இயக்குனரிடம் ஒப்படையுங்கள், அவர் மற்றதை பார்த்துக்கொள்வார்’ என கூற, பிறகு பல காட்சிகளை வெட்டி விட்டார்களாம்.