கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’ உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் மதுரை மற்றும் தென் ஆற்காடு ஏரியாக்களில் வெளியாகவில்லை. மதுரை விநியோகஸ்தருக்கு தர வேண்டிய 1.5 கோடி பஞ்சாயத்து காரணமாக மதுரையில் வெளியாகவில்லை.
அதேபோன்றதொரு பஞ்சாயத்து தென் ஆற்காடு ஏரியா விநியோகஸ்தர் ஒருவருடன் இருந்ததால் அங்கும் வெளியாகவில்லை. இரண்டு ஏரியாக்களிலும் விஸ்வரூபம்- 2 படம் வெளியாகியிருந்தால் சுமார் 5 கோடி வருவாய் கிடைத்திருக்கும். அதில் கொடுக்க வேண்டிய 2 கோடி போக மீதி 3 கோடி லாபம் ஈட்டியிருக்கலாம். ஆஸ்கார் ரவிசந்திரன் உடன்பாட்டுக்கு ஒத்துவராததினால் பிரச்சனை முடியாமல்போய், படம் வெளியாகாமல் போய்விட்டது.
இரண்டு ஏரியாக்களில் படம் வெளியாகவில்லை என்பதை அறிந்த கமல் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆஸ்கார் ரவியோ, கமலின் கருத்தை கண்டு கொள்ளவே இல்லை. அவருக்கு சேர வேண்டிய மொத்தப் பணத்தையும் நயா பைசா பாக்கி வைக்காமல் கொடுத்துவிட்டேன். அதற்கு மேல் அவர் என்னுடைய வியாபாரத்தில் தலையிட வேண்டாம் என்று கமலுக்கு நெருக்கமானவர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிட்டாராம். அதனால் வேறுவழியில்லாமல் அமைதியாகிவிட்டார் கமல்.

