சச்சின் ரவி இயக்கத்தில், ரக் ஷித் ஷெட்டி ஷானாவி ஸ்ரீவத்சா ஜோடியாக நடிக்கும் கன்னட படம், அவனே ஸ்ரீமன் நாராயணா.
இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
படம் குறித்து, ரக் ஷித் ஷெட்டி கூறுகையில், ”இப்படம் தமிழில் வெளியாவது, கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.
காரணம், நடிகர் கமல் மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோரால் ஈர்க்கப்பட்டே திரையுலகுக்கு வந்தேன்,” என்றார் ரக் ஷித் ஷெட்டி .

