முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் மாயாபுரி என்ற மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உள்ளது. இதில் அன்னை தெரசா, மன்மோகன்சிங், அப்துல் கலாம், ஒபாமா, அமிதாப்பச்சன், ஷாரூக்கான், மோகன்லால் என பல அரசியல் மற்றும் சினிமா பிர பலங்களின் மெழுகுச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய்யின் மெழுகுச்சிலையும் நேற்று முதல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ரசிகர்களும், பொதுமக்களும் அந்த சிலையை பார்த்து ரசித்து, செல்பிக்கள் எடுத்து வருகின்றனர்.

