சிவகார்த்திகேயன் முதன்முதலாக தயாரித்துள்ள படம் கனா. நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகயிருப்பதாக அறிவித்துள்ளனர். ஆனால், டிசம்பரில் எந்த தேதியில் வெளியாகிறது என்பதை குறிப்பிடவில்லை.
