பட்டாஸ் படத்தை அடுத்த பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடிக்கிறார் தனுஷ். திருநெல்வேலி கதையில் உருவாகும் இப்படத்திற்காக நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார் தனுஷ். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தையும் அசுரனை தயாரித்த தாணுவே தயாரிக்கிறார்.
இதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி, நாயகனாக தனுஷ் நடிக்கப் போகிறாராம். பவர்பாண்டி படத்தை இயக்கி, சின்ன வயது ராஜ்கிரணாகவும் நடித்த தனுஷ், அதன்பிறகு இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி நடிக்கிறார்.

