கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்துர். அதையடுத்து படவாய்ப்பு இல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வந்த அவர், சந்தானம் நடித்துள்ள ஓடி ஓடி உழைக்கனும் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
அந்த படத்தை அடுத்து இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் 3டி படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் கூடுதல் ஆர்வம் காட்டி வரம் அமைரா, இதுவரை சிங்கிள் ஹீரோனியாகத் தான் நடிப்பேன் என்று கண்டிசனாக கூறி வந்தார். ஆனால் இப்போது மூன்று ஹீரோயின் இடம்பெறும் படங்களில் நடிக்கவும் தயாராகி விட்டார்.