மலையாளத்தில் தயாராகி வரும் படம் ஒரு அடார் லவ். பிரியா வாரியர், நூரின் ஷெரிப் என்ற புதுமுகங்களுடன், அனீஷ் மேனன், யாமி சோனா, பிரதீப் கோட்டையம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஓமர் லூலு இயக்கி உள்ளார். ஷாம் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெறும் மாணிக்க மலராய் என்ற பாடலில் பிரியாவாரியின் ஒரு கண் சிமிட்டல் காட்ட. அது இந்தியாவையே சிமிட்ட வைத்தது. இளைஞர்களிடையே அது காட்டுத் தீயாக பரவியது. அந்த கண்சிமிட்டலுக்கும், பாடலுக்கும் எதிராக பல வழக்குகள் போடப்பட்டது. அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது.
இதனால் மலையாளத்தில் தயாரான படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியிட திட்டமிட்டார் தயாரிப்பாளர். அதன்படி தமிழில் அதே பெயரில் வெளிவருகிறது. வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். வருகிற பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தில் படம் வெளிவருகிறது.