பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகும் தலைவி படத்தில் நடிக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். எந்தவொரு சமூக பிரச்சினை என்றாலும் உடனே குரல் கொடுப்பவர் கங்கனா. குறிப்பாக பாகிஸ்தான் உடன் தொடர்பில் இருக்கும் பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தவர்.
இந்த நிலையில், சினிமா சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினைக்கும் தற்போது உரக்க குரல் கொடுத்துள்ளார். அதாவது, ஹிந்தி நடிகைகளான ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி போன்றோர் ஹீரோக்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் கேட்பது தவறு. காரணம் நடிகர்களுக்காகத்தான் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகிறார்கள் என்று ஒரு கருத்து வெளியிட்ருந்தனர்.
அதையடுத்து கங்கனா அவர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஹீரோக்களால் மட்டும்தான் படங்கள் ஓடுகிறது என்று நான் நினைக்கவில்லை. நடிகைகளுக்காகவும் படங்கள் ஓடுகிறது. அதனால் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். எந்த விதத்திலும் நடிகைகள் நடிகர்களுக்கு குறைந்தவர்கள் இல்லை. இதை அனைத்து நடிகைகளும் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். கங்கனாவின் கருத்து பாலிவுட்டில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

